குறும்செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

French Open Tennis Djokovic advances to Quarter finals

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.

“கிராண்ட்ஸ்லாம்” என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியிம் மசெட்டியுடன் மோதினார்.

இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் 2 செட்களை மசெட்டி கைப்பற்றி அசத்தினார்.

அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் 3வது செட்டை 6-1 எனவும், 4வதுசெட்டை 6-0 எனவும் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஜோகோவிச் 4-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது மசெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

இறுதியில், ஜோகோவிச் 6-7, 6-7, 6-1,6-0, 4-0 என செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-5, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் இத்தாலி வீரர் ஜானி சினரை வீழ்த்தினார்.

French Open Tennis Djokovic advances to Quarter finals

Related posts

கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு…!

Tharshi

தேசியப் பட்டியலில் இடம் வேண்டாம் : பரணிதரன் வேண்டுகோள்..!

Tharshi

நுண்கலைக் கல்லூரி மாணவர்களுக்காக இடம்பெற்ற கற்பித்தல் செயற்பாடு..! (வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்ள முடியும்)

Tharshi

Leave a Comment