குறும்செய்திகள்

பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Mahatma Gandhis great granddaughter sentenced to 7 Years

பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் 56 வயதான மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின், ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக கடந்த புகார் அளித்தார்.

அதாவது, இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், ஆஷிஷ் லதா ராம்கோபின் திங்கள்கிழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Mahatma Gandhis great granddaughter sentenced to 7 Years

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Tharshi

உள்நாட்டு மீனவர்களிடையே இந்திய டெல்டா கொவிட் திரிபு பரவக்கூடிய அபாயம்..!

Tharshi

16-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment