குறும்செய்திகள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது..!

Nainathivu Nagapusani Amman temple annual festival has been postponed

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Nainathivu Nagapusani Amman temple annual festival has been postponed

Related posts

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் : தம்பதியினர் கைது..!

Tharshi

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் : ஆய்வில் தகவல்..!

Tharshi

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு..!

Tharshi

Leave a Comment