குறும்செய்திகள்

டிக் டாக் செயலி தடை விவகாரம் : டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!

Biden revokes Trump executive orders targeting TikTok and WeChat

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின் உத்தரவுகளை ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

அதாவது, சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார். அத்துடன், புதிய பயனர்கள் இந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பித்தார். நடைமுறைக்கு வராத அந்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்தன.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கிறார்.

அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.

Biden revokes Trump executive orders targeting TikTok and WeChat

Related posts

இணையத்தில் வைரலாகும் புது ஆப்பிள் வாட்ச் அம்சங்கள்..!

Tharshi

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Tharshi

உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி : நெகிழ்ச்சியில் பொன்னம்பலம்..!

Tharshi

Leave a Comment