குறும்செய்திகள்

அனைவரும் விரும்பத்தக்க பீனட் பட்டர் வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை..!

Homemade Peanut Butter Recipe in Tamil

பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட காலமெல்லாம் போய், இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ்.

கடையில் பீனட் பட்டர் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்து கொள்ளலாம்.

அது எப்படி என்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 1 கப்
கடலை அல்லது ரைஸ் பிராண்ட் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலையாக இருந்தால் அதை உரித்து கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள்.

* பின் அதன் தோலை நீக்கிவிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

* கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

* கொஞ்சம் மசிந்ததும் எண்ணெய் மற்றும் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள். அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்… 🙂

Homemade Peanut Butter Recipe in Tamil

Related posts

2020 பரா ஒலிம்பிக் : முதல் தங்கத்தை வென்ற அவுஸ்திரேலியா..!

Tharshi

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று பாலியல் புகார்..!

Tharshi

நாட்டில் மேலும் 2,028 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment