குறும்செய்திகள்

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..!

Old man arrested who gave sex torture to eight years girl child

தூத்துக்குடி அருகே, எட்டு வயது சிறுமி என்று கூட பாராமல், பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 8 வயது சிறுமிக்கு மாரியப்பன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மீனா, மாரியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

இதைத் தொடர்ந்து, மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதையடுத்து, போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Old man arrested who gave sex torture to eight years girl child

Related posts

ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி..!

Tharshi

காபூல் விமான நிலையத்துக்கு அருகே மூன்றாவது குண்டுவெடிப்பு : 13 பேர் பலி…!

Tharshi

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல்..!

Tharshi

Leave a Comment