குறும்செய்திகள்

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

One killed in bus crash in the area of Madduvil

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இன்று மாலை 5 மணியளவில், சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டதனால், பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

மேலும் இவ்விபத்தில், மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்.., 

தென்னிலங்கையில் இருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ள போது, மட்டுவில், பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.

இதனால், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.

மேலும், பேருந்துக்கு கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

One killed in bus crash in the area of Madduvil

Related posts

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Tharshi

Marriott Plays With Sensory-Rich Virtual Reality Getaways

Tharshi

Trump Tried to Protect Qualcomm. Now His Trade War May Be Hurting It

Tharshi

Leave a Comment