குறும்செய்திகள்

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி..!

Passenger van falls into river in Pakistan

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வேன் டிரைவர் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று காலை வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.

இந்த வேன் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பனிபா நகரில் மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு குறுகலான வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது.

அந்த ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால், சில நொடிகளில் வேன் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வேன் டிரைவர் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Passenger van falls into river in Pakistan

Related posts

5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை..!

Tharshi

ஒரே நேரத்தில் பிறந்து மாறிய குழந்தைகள் : ஆண் குழந்தைக்கு அடம்பிடிக்கும் அம்மாக்கள்..!

Tharshi

இன்று இதுவரை 2340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment