குறும்செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

Vishal compliant producer RP Choudary

நடிகர் விஷால், தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பெப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார்.

எனினும், கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை.

அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vishal compliant producer RP Choudary

Related posts

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை..!

Tharshi

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi

ஜூன் 21 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா.. : கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து..!

Tharshi

Leave a Comment