குறும்செய்திகள்

ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண் : கைக்குட்டையை வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஹோட்டல்..!

Woman gets Deep Fried towel instead Chicken Order

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஆன்லைனில் ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் சூடான வறுத்த துணி அனுப்பி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்  நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலிக் பரேஸ் எனும் பெண். தனது குடும்பத்துடன் தலைநகர் மணிலாவில் வாழ்ந்து வருகிறார். அலிக் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஓட்டலில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சம்பவத்தன்று அவர் தனது மகனுக்காக ஒரு பிரபல பாஸ்புட் உணவகத்தில் இருந்து சிக்கல் வறுவலை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். சுமார் அரை மணி நேரத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வந்தடைந்தது.

செம பசியில் இருந்த தாயும், மகனும் அந்தப் பார்சலை பிரித்து தாங்கள் ஆர்டர் செய்த சிக்கன் வறுவலை சாப்பிட ஆயத்தமாயினர். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல், அவர்களால் அந்த சிக்கனை கடித்து இழுக்க முடியவில்லை. பார்சலில் வந்த அந்த சிக்கன் மிகவும் கடினமாக இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அலிக், அதன் மேல் தோலை நீக்கி உள்ளே பார்த்த அவர் அதிர்ந்து போய்விட்டார். காரணம் மேலே மசாலா மொறுமொறுப்புடன் இருந்த அதன் உள்ளே இருந்தது ஒரு கைக்குட்டை. இதனால் கடும் கோபமடைந்த அலிக், அதை அப்படியோ வீடியோ எடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதைப்பார்த்து நெட்டிசன்களும் அதிர்ந்து போய்விட்டனர்.

அதைத் தொடர்ந்து இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி விட்டது. சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பாஸ்புட் உணவகத்தையும் கமெண்ட்டில் திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதையடுத்து அந்த பாஸ்புட் உணவகம் சம்பந்தப்பட்ட கிளையை தற்காலிகமாக மூடிவிட்டது. மேலும் தங்களுடைய ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

Woman gets Deep Fried towel instead Chicken Order

Related posts

கொரோனா பொது நிவாரண நிதி : நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Tharshi

பொலிஸ் அதிகாரியை மோதி தப்பிச் சென்ற கார் மற்றும் உரிமையாளர் தொடர்பில் வெளியான தகவல்..!

Tharshi

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

Leave a Comment