குறும்செய்திகள்

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று : புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி..!

11699 New Corona infections in Russia

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை உலக அளவில் 17.52 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 37.77 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக புதிதாக 11,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 51,67,949 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 383 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 47,71,995 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,70,676 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

11699 New Corona infections in Russia

Related posts

நான்கரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த பரிதாபம்..!

Tharshi

எலும்புகள் பலவீனமடைவதற்கான முக்கிய காரணிகள்..!

Tharshi

18-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment