குறும்செய்திகள்

பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம் கோரிக்கை..!

Demand to tighten travel ban law in Srilanka

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 12 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் 28 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..,

“தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நோயாளிகள் வருகின்றனர். மேலும் நோயாளர்களின் தொகை அதிகரிக்குமானால் மருத்துவமனை கட்டமைப்பு அதனை தாங்கமுடியாமல் போகலாம்.

அதேபோன்று, தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வினைத்திறனுடனும் சாதாரண நடைமுறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தேவையான இரண்டாவது தடுப்பூசிகளையும் காலம் தாமதிக்காது பெற்றுக்கொள்வதற்கு நிலையான செயற்திட்டமொன்றை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும்.” என விசேட மருத்துவர் சங்கம் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளது.

Demand to tighten travel ban law in Srilanka

Related posts

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Tharshi

BBC தமிழ் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்கு அழைப்பு..!

Tharshi

திருமணமாகி இரண்டே மாதங்கள் : தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் தம்பதியினர்..!

Tharshi

Leave a Comment