குறும்செய்திகள்

சிறுவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் வழிமுறைகள்..!

Drug addiction children care

பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது..? காரணங்கள் என்ன..? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்..? என்பது குறித்து பொதுவாகவே எல்லோரும் தெரிந்து வைத்திருத்தல் மிகவும் அவசியம்.

இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும்.

இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.

சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர்.

பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக் கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.

மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

அத்துடன், அவர்களுக்கு “காக்னடிவ் பிகேவியர் தெரபி” மற்றும் “பேமிலி தெரபி” மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும்.

எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.

Drug addiction children care

Related posts

சிக்கியது மூதாட்டியை தாக்கிய சிறுத்தை..!

Tharshi

10-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் : தம்பதியினர் கைது..!

Tharshi

Leave a Comment