குறும்செய்திகள்

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு..!

Finding the body of a missing person in Puthukkudiyiruppu

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனந்தபுரம் கிராமத்தினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நந்திக்கடலில் மீன் பிடிப்பதற்காக நேற்று (09) இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைத் தொழில் காரணமாக மீனவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றதோடு நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Finding the body of a missing person in Puthukkudiyiruppu

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!

Tharshi

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தலில்..!

Tharshi

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment