குறும்செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பெண் ரோபோ..!

Grace the healthcare robot COVID 19 created

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில், அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு, மனிதரைப் போல் உருவ அமைப்பு கொண்ட பெண் ரோபோவை ஹாங்காங்கில் டேவிட் ஹான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார்.

“கிரேஸ்” என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரிப்பு, சோகம் உள்ளிட்ட மனித முக பாவனைகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பதில் அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகள் மற்றும் வயதானவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகள் ‘கிரேஸ்’ ரோபோ செய்யும். ஒரு செவிலியர்போல் பணிகளை செய்கிறது. ரோபோவில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா சென்சார் மூலம் எதிரே இருப்பவர்களின் உடல் வெப்பத்தை கண்டறிகிறது.

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதால் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Grace the healthcare robot COVID 19 created

Related posts

10-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

19-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment