குறும்செய்திகள்

மன்னாரில் கரை ஒதுங்கும் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்..!

In Mannar Dangerous items discharged from the burning ship

இன்று (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில், அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க முடிவதுடன், குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

In Mannar Dangerous items discharged from the burning ship

Related posts

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது..!

Tharshi

நாட்டில் இன்று 2,890 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

15-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment