குறும்செய்திகள்

சாராயம் என நினைத்து சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாப பலி..!

Auto driver who drank the sanitizer died tragically

அரியலூரில், சாராயம் என நினைத்து சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் பூட்டி கிடக்கின்றன.

இதனால் மதுபிரியர்களை குறி வைத்து கள்ளச் சாராய விற்பனை நடந்து வருகிறது. ஆங்காங்கே நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை பொலிசார் கண்டுபிடித்து தடுத்தும் வருகின்றனர்.

கள்ளச்சாராய விற்பனையை பொலிசார் தடுத்து நிறுத்தினாலும் சிலர் போதைக்காக எதை, எதையோ குடித்து அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில், இரண்டு வாரத்துக்கு முன்பு காஞ்சிபுரத்தில் போதைக்காக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கிற இரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேருக்கும் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், அரியலூரில் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்த ஆட்டோ டிரைவர் இறந்துள்ளார்.

அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். ஆட்டோ டிரைவர். மது போதைக்கு அடிமையான இளங்கோவன், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிக்க முடியாமல் விரக்தியில் புலம்பி வந்துள்ளார். எப்படியாவது போதை வேண்டும் என்று நினைத்த அவர் கடந்த 7 ஆம் திகதி சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார்.

இளங்கோவனின் நண்பர்களான மோகன், சரவணன் ஆகியோரும் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார். குடித்த பிறகு தான் அவர்களுக்கு அது சாராயம் அல்ல, சானிடைசர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Auto driver who drank the sanitizer died tragically

Related posts

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்..!

Tharshi

19-12-2020 – இன்றைய ராசி பலன்கள்

Tharshi

சாவகச்சேரியில் நிறுவப்பட்டுள்ள சீன நிறுவனம் : இரு மொழிகளில் மாத்திரம் பெயர் பலகை..!

Tharshi

Leave a Comment