குறும்செய்திகள்

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் : பிரிட்டன் அறிவிப்பு..!

G7 countries will provide 100 crore vaccines to poor countries

ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், பிரிட்டன் சார்பில் வரும் செப்டெம்பர் மாதத்துக்குள்ளாக,  பிற நாடுகளுக்கு, 50 இலட்சம் டோஸ்கள் வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதிலும், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான ஜி7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

மேலும், பிரிட்டன் தங்களிடம் உபரியாக உள்ள சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும், மேலும் 2.5 கோடி டோஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதில், ஐ.நா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G7 countries will provide 100 crore vaccines to poor countries

Related posts

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்..!

Tharshi

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானி ஒருவர் மர்ம முறையில் மரணம்..!

Tharshi

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு : பாதுகாப்பு தீவிரம்..!

Tharshi

Leave a Comment