குறும்செய்திகள்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா..!

Raashi Khanna play for Prabhas Movie

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகின்றார் ராஷி கண்ணா.

தமிழில் “இமைக்கா நொடிகள்” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் “அடங்கமறு”, விஷாலுக்கு ஜோடியாக “அயோக்யா”, விஜய் சேதுபதியுடன் “சங்கத்தமிழன்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா தற்போது, சுந்தர் சி-யின் “அரண்மனை 3”, விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்”, ஜீவாவுக்கு ஜோடியாக “மேதாவி” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி கண்ணா.

இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Raashi Khanna play for Prabhas Movie

Related posts

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான் பயங்கரவாதிகள் கொலை..!

Tharshi

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

கணவன், மனைவியை வாளால் வெட்டிய நபர் அதிரடி கைது..!

Tharshi

Leave a Comment