குறும்செய்திகள்

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை..!

Request to Australia to purchase Astrazeneca Vaccines

இலங்கை அரசாங்கம், அவசரப் பயன்பாட்டுக்காக அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்னுடன் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று நோயால் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா அளித்த ஆதரவுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொருத்தமான திட்டங்களை தொடங்க அமைச்சர்கள் இதன்போது ஒப்புக் கொண்டனர்.

ஏற்கனவே, கொவிட்-19 தடுப்பூசி கொள்வனவுக்கு இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பானிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Request to Australia to purchase Astrazeneca Vaccines

Related posts

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

Tharshi

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதி..!

Tharshi

Audio Tour App Detour Steers You Away from the Typical Tourist Traps

Tharshi

Leave a Comment