குறும்செய்திகள்

நண்பரின் காதல் மனைவியை தனது மனைவியாக்கிய துரோகம் : இறுதியில் நடந்த கொடூர கொலை..!

Strangled his wife to death near Ulundurpet in Kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே, காதல் மனைவியை இளைஞர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் காதல் மனைவியை, ஏமாற்றி தனது மனைவியாக்கி கொண்ட இளைஞர் இந்த வெறிச்செயலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி என்பவர், நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் லாரி ஓட்டுனர் சிவா என்பவரை காதலித்தார். இந்த ஜோடி கடந்த 4 வருடங்களுக்கு முன் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு எழில் செல்வியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு எழில்செல்வி தனது வீட்டை விட்டு வெளியேறினார். தனது காதலனான சிவாவை திருமணம் செய்து கொண்டு நைனார்குப்பத்தில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2-வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சிவாவுடன் லாரி ஓட்டுனராக ஒலையனூர் கிராமத்தைச்சேர்ந்த ஐய்யப்பன் என்பவர் பணிபுரிகிறார். இவர் சிவாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து நட்பு பாராட்டினார்.

அப்போது ஐய்யப்பனுக்கு எழிலரசியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சகஜமாக பேசத் தொடங்கிய நாளடைவில் இருவரும் நீண்ட நேரம் பேசியிள்ளார்கள். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் இருக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து வாழ்வது தான் ஒரே வழி என முடிவெடுத்தனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் எழில் செல்வி தனது குழந்தை ஹன்சிகாவுடன் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது கள்ள காதலன் ஐய்யப்பனுடன் சென்றார். தனது கணவர் சிவா கட்டிய தாலியை அறுத்து எறிந்து ஐய்யப்பனை 2 வது திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும், உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

ஐய்யப்பனுடன் மனைவி ஓடிவிட்டதால் ஊர் மக்கள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட அவமனாத்தாலும், ஒரு புறம் நட்புத் துரோகம்.., மறு புரம் காதல் மனைவியின் துரோகம் என விரக்தியடைந்த சிவா தனது சொந்த ஊரை விட்டு தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்று லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இதுஒருபுறம் எனில் ஐய்யப்பன் சென்னையில் உள்ள ஒரு பெட்ரோல்பங்கிற்கு லாரி ஓட்டுனராக பணிக்கு சென்று வருகிறார்.

அண்மையில், வீடு திரும்பிய ஐய்யப்பன் கடந்த 3 ஆம் திகதி இரவு தனது மனைவி எழில் செல்விக்கு உடல் நிலை சரியில்லை என்று நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறும் நண்பரை வரவழைத்துள்ளார். அவர்கள் எழில் செல்வியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எழில் செல்வி நான்கு, ஐந்து மணி நேரங்களுக்கு முன்பே கழுத்து இறுக்கப்பட்டு, காயங்களுடன் இறந்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் ஐயப்பனிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் விரைந்து வந்து ஐய்யப்பனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.

விசாரனையின் போது நடந்த விபரங்களை மழுப்பலாக கூறிய ஐய்பப்பனிடம் காவல்துறையினர் தங்கள் பாணியில் உரிய விசாரனை மேற்கொண்டனர். அப்போது உண்மையை கக்கி உள்ளார் ஐயப்பன்.

ஐப்பன் இதுபற்றி கூறும் போது..,

“நான் வேலைக்கு செல்லும் போது ஒன்றிரண்டு முறை எழில் செல்விக்கு போன் செய்தால் பிசியாக வரும் . அதை நான் கண்டித்தேன். ஏற்கனவே என்னுடன் பேசியது போல் வேறு யாருடனாவது பேசுகிறாளா? என சந்தேகமடைந்தேன்.

அன்று இரவு போன் பிசியாக இருந்ததாகவும் தான் போனை பிடுங்கி பார்த்தேன். அப்பேது நம்பர் அழிக்கப்பட்டிருந்தது. ஆத்திரமடைந்து எழில் செல்வியை யாருடன பேசினாய் அடித்து கேட்டேன். நான் யாருடனும் பேசவில்லை என்று தொடர்ந்து மறுத்தார். கோபத்தின் உச்சிக்கு சென்று நான் எழில் செல்வியின் கழுத்தை இறுக்கியபடி கேட்ட போது மூச்சு திணறி இறந்தார்” என்றார்.

இதனையடுத்து பொலிசார் ஐய்யப்பனன கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த எழில் செல்வியின் முதல் கணவர் சிவா காவல் நிலையத்திற்கு சென்று தனது குழந்தை ஹன்சிகா பெற்றுச் சென்ற சம்பவம் அனனவரையும் நெகிழச் செய்துள்ளது.

Strangled his wife to death near Ulundurpet in Kallakurichi

Related posts

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் “மாஸ்டர்”..!

Tharshi

14 மில்லியன் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி..!

Tharshi

நடமாட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள தகவல்..!

Tharshi

Leave a Comment