குறும்செய்திகள்

சுவையான மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போமா..!

Tapioca Honey Salad Recipe in Tamil

மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க வல்லது.

அந்தவகையில், மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போமா..?

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்
தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு – 1 டீஸ்பூன்
தேன் – 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை :

* கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

* பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.

* வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல், தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

* சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு : உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்.

Tapioca Honey Salad Recipe in Tamil

Related posts

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்..!

Tharshi

யாழில் இளம் வர்த்தகர் தற்கொலை..!

Tharshi

திருமணமாகி இரண்டே மாதங்கள் : தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் தம்பதியினர்..!

Tharshi

Leave a Comment