குறும்செய்திகள்

13-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

13th June Today Raasi Palankal

இன்று ஜூன் 13.2021

பிலவ வருடம், வைகாசி 30, ஞாயிற்றுக்கிழமை, 13.6.2021
வளர்பிறை, திரிதியை திதி இரவு 8:23 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம் மாலை 6:07 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மன இறுக்கம் தீரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
பரணி: குழந்தைகள் வாழ்வில் சாதனைத் திருப்பம் உண்டாகும்.
கார்த்திகை 1: மேலதிகாரி உங்கள் விருப்பமறிந்து நடந்து கொள்வார்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மதிப்பு உயரும். முயன்ற விஷயம் நல்லபடியாக நடைபெறும்.
ரோகிணி: பணியில் பொருளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: இத்தனை நாள் பணியிடத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தேங்கியிருந்த விஷயங்களை முனைந்து முடிப்பீர்கள்.
திருவாதிரை: மின்சாரம் மற்றும் இயந்திரங்கள் பற்றி எச்சரிக்கை தேவை.
புனர்பூசம் 1,2,3: வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: மதிப்பு, மரியாதை கூடும். பிறரின் செயல் கோபத்தை துாண்டலாம்.
பூசம்: நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். திறமை கூடும்
ஆயில்யம்: வேண்டப்பட்டவரின் ஆரோக்கியம் மேம்படும். வீடு கட்டுவீர்கள்.

சிம்மம் :

மகம்: எந்த பிரச்னையையும் சமாளிக்கும் மனோதைரியம் ஏற்படும்.
பூரம்: வசதியான வீட்டுக்கு மாற விரும்புவீர்கள். கடன்கள் மிகக் குறையும்.
உத்திரம் 1: சக பணியாளருடன் இருந்து வந்த மனத்தாபங்கள் நீங்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: இதுவரை கஷ்டப்படுத்திய மேலதிகாரி மாற்றலாகிச் செல்வார்.
அஸ்தம்: விரும்பிய இடமாற்றம் தாமதமாகும். கவலைகள் குறையும்.
சித்திரை 1,2: பணிகளை சிரமப்பட்டு முயற்சியால் முடித்து காட்டுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: கடந்த காலக் கவலைகள் திடீரென்று காணாமல் போகும்.
சுவாதி: கொஞ்சம் சேமிக்க முடியும். கற்பனை பயங்களால் சிரமப்படுவீர்கள்.
விசாகம் 1,2,3: உங்கள், உழைப்பை மற்றவருக்குப் பயன்படுத்துவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: அலுவலகப் பணிகளில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும்.
அனுஷம்: எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் கைகூடும். பயம் நீங்கும்.
கேட்டை: சவாலான விஷயங்களைச் சாதித்துப் பெருமிதம் அடைவீர்கள்.

தனுசு:

மூலம்: எதிலும் கவனமாயிருங்கள்.. யாரையும் அதிகம் நம்ப வேண்டாம்.
பூராடம்: அவசரப்படாமல் செயல்படுங்கள். வம்புப் பேச்சால் பிரச்னை வரலாம்.
உத்திராடம் 1: மனப்போராட்டங்கள் தீரும். நம்பிக்கை தளர வேண்டாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலைகளை மிகவும் சிரமப்பட்டே முடிப்பீர்கள்.
திருவோணம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடுதலாகும்.
அவிட்டம் 1,2: சந்தேகம் உள்ள நபர்களை விலக்குவது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: கடினமாக உழைத்தே எதையும் சாதிக்க வேண்டிவரும்.
சதயம்: வாழ்க்கைத்துணைக்கு உங்களால் நன்மை ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: பொது நல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நிம்மதி வரும்.
உத்திரட்டாதி: எதிர்பாராத சந்திப்பு நிகழும். பயத்தை உதறுங்கள்.
ரேவதி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

13th June Today Raasi Palankal

Related posts

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது..!

Tharshi

வவுனியாவில் இளவயதினர் 7 பேர் கொரோனா வைரஸுக்கு பலி..!

Tharshi

22-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment