குறும்செய்திகள்

இன்றும் நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகள் : பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு..!

Ajith Rohana said that today and tomorrow are special testing activities

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக, இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது..,

“தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக வார இறுதி தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, இன்றும் நாளையும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்றுக் கூடல்களில் ஈடுபடக்கூடாது.

அவ்வாறு எவறேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

Ajith Rohana said that today and tomorrow are special testing activities

Related posts

Cheryl Steals Kate Middleton’s Beauty Icon Status

Tharshi

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை : அதிர்ச்சியில் மனைவி..!

Tharshi

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!

Tharshi

Leave a Comment