குறும்செய்திகள்

மேக்புக் வெளியீட்டை திடீரென மாற்றிய ஆப்பிள் நிறுவனம்..!

Apple abruptly changes new MacBook release

ஆப்பிள் நிறுவனம், ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் வைத்து, புது மேக்புக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், புதிய M1X பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களை ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. எனினும், புது மேக்புக் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு யூடியூப் வீடியோவில் M1X மேக்புக் ப்ரோ மற்றும் M1X போன்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஆனால், இதுகுறித்து வெளியாகும் தகவல்களில் சிலர், புது மேக்புக் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்றும், சிலர் வீடியோவுக்கான SEO-வை மேம்படுத்த ஆப்பிள் இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறுகின்றனர்.

எனினும், புது மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற போதும், M1X பிராசஸர் மற்றும் M1X கொண்ட மேக்புக் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஆப்பிள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Apple abruptly changes new MacBook release

Related posts

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

சரியான முறையில் மாஸ்க் அணிவது எப்படி..?

Tharshi

அளவுக்கு மேல் உபயோகிப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தேன்..!

Tharshi

Leave a Comment