குறும்செய்திகள்

யூரோ கோப்பை கால்பந்து போட்டி : 3-0 என துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி..!

Euro 2020 Italy Convincing In 30 Win Over Turkey

நேற்று ஆரம்பமாகிய யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி அதிரடி வெற்றி பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இப் போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

எனினும், துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Euro 2020 Italy Convincing In 30 Win Over Turkey

Related posts

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ரசிகர் செயலால் ஆத்திரம் : கார் கதவை அறைந்து சாத்திய பிரபல நடிகை..!

Tharshi

Leave a Comment