குறும்செய்திகள்

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா..!

Mango Fish Curry Recipe In Tamil

மாங்கா‌ய் ‌சேர்த்த மீ‌ன் குழ‌ம்பை சூடான சாதத்துடனும், பழைய சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

அந்த வகையில், இன்று இந்த மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள் :

மீன் – அரை கிலோ
புளி – சிறிதளவு
பெ.வெங்காயம் – 5
தக்காளி – 4
மா‌ங்கா‌ய் – 1
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
க‌றிவே‌ப்‌பிலை – சி‌றிதளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* மீன்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

* கரைத்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* அதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போட்டு கிளறி விடவும்.

* பின்னர் மாங்காய் துண்டுகளை போடவும்.

*மீன் துண்டுகள் நன்கு வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்… 🙂

Mango Fish Curry Recipe In Tamil

Related posts

19.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

என் உடல்நிலை பற்றி வெளியே சொல்ல பயம் : கதறியழுத சமந்தா..!

Tharshi

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு..!

Tharshi

Leave a Comment