குறும்செய்திகள்

பெண்களே கிரெடிட் கார்ட் உபயோகிக்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க..!

Remember these things when women using a credit card

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் கவனம் தேவை. அதனை மட்டும் சரியாக பின்பற்றினால் கிரெடிட் கார்டு உங்களுக்கு அட்சய பாத்திரம் தான். கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் கவனம் தேவை.

முதலில் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது வசதிகள் மற்றும் சலுகைகள் தரும் கார்டுகள் எது? என்பதை அறிந்து கொண்டு அந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

கிரெடிட் கார்ட் உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக் கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அதில் சந்தேகம் இருந்தால் அதனை அதன் நிறுவனத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு விசாரித்து அறிந்து கொள்ளாமல் பின்னர் ஏதாவது அதிக கட்டணம் விதிக்கப்பட்டால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது எனக்கு தெரியாது என்று அவர்களிடம் கூற முடியாது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள். அப்புறம் உங்களது பணம் வீணாகி விடும். பில்களுக்கு உரிய தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி விட வேண்டும்.

இல்லையென்றால் கூடுதல் வட்டி மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். ஒரு வேளை ஒரே பில் மிக அதிகமாக இருந்தால் அதனை மொத்தமாக செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தினிடம் பேசி தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி கேட்கலாம். அதற்கு ஒரு சிறிய அளவு வட்டி மட்டுமே விதிப்பார்கள்.

கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பார்த்து விட்டு குப்பை தொட்டியில் போடும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். அந்த பில்களை தனியாக ஒரு கோப்பில் பாதுகாத்து வைத்திருங்கள். ஏனெனில் அப்போது தான் கணக்கு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவற்றை அழித்து விடலாம். இது போன்ற பல்வேறு அம்சங்களை நீங்கள் நினைவில் கொண்டால் கிரெடிட் கார்ட் உங்களுக்கு நன்மை தரும். சிலர் மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பிரச்சினை தான்.

எனவே கிரெடிட் கார்ட் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

Remember these things when women using a credit card

Related posts

The future steps of Scala – What to expect from upcoming releases

Tharshi

இங்கிலாந்தில் இருந்து 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த சரக்கு விமானம்..!

Tharshi

சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!

Tharshi

Leave a Comment