குறும்செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

Rise in the number of people recovering from corona infection in India

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,93,59,155 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,80,690 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 24,96,00,304 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Rise in the number of people recovering from corona infection in India

Related posts

ரொனால்டோவுக்கு கிடைத்த பேரதிஷ்டம்..!

Tharshi

காலை உணவில் அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

Tharshi

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்..!

Tharshi

Leave a Comment