முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இம்மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது.
அதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கோரி மேற்படி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்தவகையில், நேற்றைய தினம் நீதிபதிகளான எல். வி. பி. தெஹிதெனிய, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே மேற்படி அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Rishad Bathiudeen petition has been adjourned till the 23rd