குறும்செய்திகள்

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் “மாஸ்டர்”..!

Vijays Master Movie is a remake in Hindi

பொங்கல் பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் சாந்தனு, அர்ஜுன்தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

நல்ல வசூல் குவித்ததை பார்த்து “மாஸ்டர்” படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இந்தியில் மாஸ்டர் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதும் பணிகள் நடந்து தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க தயாராகி வருகிறார்கள்.

மேலும், “மாஸ்டர்” இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான்கானுக்கு “மாஸ்டர்” படம் பிடித்துள்ளதால் விஜய் வேடத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijays Master Movie is a remake in Hindi

Related posts

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : சீன அரசு அனுமதி..!

Tharshi

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..!

Tharshi

அஸ்ட்ரா ஜெனேகா – ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி..!

Tharshi

Leave a Comment