குறும்செய்திகள்

14-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

14th June Today Raasi Palankal

இன்று ஜூன் 14.2021

பிலவ வருடம், வைகாசி 31, திங்கட்கிழமை, 14.6.2021,
வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 8:37 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, பூசம் நட்சத்திரம் இரவு 7:04 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பகைத்த சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
பரணி: பல காலம் திட்டமிட்டபடி புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
கார்த்திகை 1: சேமிப்புக்கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குடும்ப நலம் கூடும்.
ரோகிணி: உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மற்றவர்களுடன் வீண்விவாதத்தைத் தவிர்த்து மகிழ்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னை நீங்கி நிம்மதி வரும்.
திருவாதிரை: சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாகன யோகம் வரும்.
புனர்பூசம் 1,2,3: தாயாரின் உடல்நலன் நன்றாக இருக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: தொடங்கும் முயற்சி இழுபறியானாலும் அனுகூலமாக முடியும்.
பூசம்: பெரியோருக்கு உதவி செய்து ஆசிபெற்று மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: பிள்ளைகளுடன் அதிகக் கண்டிப்பின்றி நடந்துகொள்ள முயலுங்கள்.

சிம்மம் :

மகம்: வாழ்க்கைத் துணையால் வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பூரம்: புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் 1: அன்றாட விஷயங்கள் மாறுதலின்றி நடைபெறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அதிர்ஷ்டத்தால் அன்றி வரவு கடின உழைப்பால் வரும்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணையின் முயற்சியால் குடும்ப மகிழ்ச்சி கூடும்.
சித்திரை 1,2: குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்ப்போரிடம்கூடக் கனிவாக பேசி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
சுவாதி: உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நன்மையளிக்கும்.
விசாகம் 1,2,3: பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: புதிய முதலீடுகள் வேண்டாம். லோன் கைக்குக் கிடைக்கும்.
அனுஷம்: சகோதரர்களால் நன்மையும் சங்கடமும் ஏற்படக்கூடும்.
கேட்டை: பலரும் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.

தனுசு:

மூலம்: முன்னேற்றம் கூடும் நாள். கவனமாகப் பேசினாலும் சிரமம் வரும்.
பூராடம்: நண்பர்கள், உறவினர்களிடம் வீண் தகராறு செய்ய வேண்டாம்.
உத்திராடம் 1: மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் உங்களால் வாக்குவாதம் வராமல் கவனமாக இருங்கள்.
திருவோணம்: பணியாளர்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
அவிட்டம் 1,2: அலுவலகப் பணிகளில் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனதில் இருந்துவந்த சலிப்பு அகலும். கலகலப்பான சூழல் உண்டு.
சதயம்: கவனமாய்ச் செய்யும் விஷயங்களில் சிறிதுலாபமடைவீர்கள். புகழ் கூடும்.
பூரட்டாதி 1,2,3: சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிரிகளை வெல்வீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: உங்களுக்குக் கீழ்ப்பணிபுரிபவர்களிடம் பொறுமை காட்டுங்கள்.
உத்திரட்டாதி: நண்பர்களால் உயரும் நாள். ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும்.
ரேவதி: உழைப்பால் பெருமையும் வருமானமும் நல்ல முறையில் வரும்.

14th June Today Raasi Palankal

Related posts

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Tharshi

வாரிசு பட ரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு..!

Tharshi

சிரியாவில் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் : 13 பேர் பரிதாப பலி..!

Tharshi

Leave a Comment