குறும்செய்திகள்

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்பான விபரம்..! (படம் இணைப்பு)

Details regarding those who have been vaccinated against Covid19

நாட்டில் இதுவரை 2,259,385 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 59,881 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,269,157 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 76,615 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் 181 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 355,358 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64,986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மீலும், இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Details regarding those who have been vaccinated against Covid19

Related posts

Experiencing the new Oculus Rift VR headset

Tharshi

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!

Tharshi

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு..!

Tharshi

Leave a Comment