குறும்செய்திகள்

சீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழப்பு..!

Gas pipe explosion kills 12 in central Chinese city

சீனாவின் ஹூபேய் மாகாணம் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 138 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகமாக சிசிடிவி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது. கடைகளில் வேலை செய்தவர்கள், பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் என ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களும் உடைந்தன.

விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 138 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகமாக சிசிடிவி தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்த சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் ரத்த தானம் செய்யும்படி மருத்துவமனைகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Gas pipe explosion kills 12 in central Chinese city

Related posts

தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : ரிஷபம்

Tharshi

Leave a Comment