குறும்செய்திகள்

தெற்கு சூடானில் இனவாத மோதல் : 13 பேர் பலி..!

Racial clashes in South Sudan 13 killed 16 people

தெற்கு சூடானில் நடந்த இனவாத மோதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்து உள்ளனர்.

தெற்கு சூடான் நாட்டில் லேக்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் கோனி மற்றும் தெயீத் என்ற இரு இனக்குழுக்கள் இடையே பல ஆண்டுகளாக நீடித்த மோதல் நடந்து வருகிறது.

அவர்கள் கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக உள்ளூர்வாசிகள் சட்டவிரோத வகையில் துப்பாக்கிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

அவற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில், ரும்பெக் ஈஸ்ட் என்ற பகுதியில் இரு குழுக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சேர்த்து 13 பேர் வரை கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Racial clashes in South Sudan 13 killed 16 people

Related posts

கொவிட் தொற்றுடன் இலங்கையூடாக மதுரை சென்ற சீனர்கள்..!

Tharshi

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பெண் ரோபோ..!

Tharshi

கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சாலட் செய்முறை..!

Tharshi

Leave a Comment