குறும்செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 31 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்..!

31 crore vaccine doses have been given to the public in the USA

இதுவரை அமெரிக்காவில் 31 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 31,06,45,827 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 30,93,22,545 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்காவில் இதுவரை 17,42,34,573 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 14,49,19,339 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

31 crore vaccine doses have been given to the public in the USA

Related posts

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi

பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை : திடீர் தீ விபத்தால் அதிர்ச்சி..!

Tharshi

15-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment