குறும்செய்திகள்

அனுமதி இல்லை : முடிவை மாற்றிய “வலிமை” படக்குழு..!

Ajith Valimai Movie Latest Update

அஜித் நடிப்பில் உருவாகும் “வலிமை” படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் அஜித், எச்.வினோத் கூட்டணியில் தற்போது “வலிமை” படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த காட்சியை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தலால், வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajith Valimai Movie Latest Update

Related posts

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

Tharshi

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை..!

Tharshi

05-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment