குறும்செய்திகள்

குழந்தைகள் விரல் சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிக்கும் : ஆய்வில் தகவல்..!

Also affect the finger bones when children lick their fingers

பயம் மற்றும் வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள். குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும்.

குழந்தைகள் விரல் சப்பும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். விரல் சப்பும்போது அவைகள் பாதுகாப்பாக இருப்பதுபோல் உணர்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பயம், வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும். அந்த சூழலில் அவைகள் விரலை சப்புவது சுகாதார பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். குழந்தை பருவத்தில் அவைகளின் ஈறுகள் மென்மையாக இருக்கும்.

தொடர்ச்சியாக கட்டை விரலை சப்பிக்கொண்டிருந்தால் அது ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தி பற்களின் கட்டமைப்பை சிதைத்துவிடும். தொடர்ந்து விரலை சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்திற்கு தீர்வு என்ன..?

விரலை சப்ப தொடங்கும் போதெல்லாம் அவைகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். சுவாரசியமான கதைகளை சொல்லுங்கள். விரல் சப்புவதால் ஏற்படும் பாதிப்புகளை கதைகள் வழியாகவும் புரியவைக்கலாம். விரலை சப்பாமல் இருக்கும் சமயத்தில் அவர்களை பாராட்டலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் உருவத்தில் பலகாரங்களும் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து விரல் சப்பிக் கொண்டிருந்தால் அப்படி மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை கொடுத்து, விரல் சப்புவதை தவிர்க்கச் செய்யலாம்.

மேலும், விரல் சப்பும் பழக்கத்தில் இருந்துவிடுபட்டு விட்டு, மீண்டும் அந்த பழக்கம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தில் இருக்கும்போதும், தங்களுக்கு சௌகரியமான சூழல் இல்லாத போதும் குழந்தைகள் விரல் சப்புகின்றன. அதனால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டியது அவசியமானது.

Also affect the finger bones when children lick their fingers

Related posts

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Tharshi

விரைவில் வெளிவரவுள்ள சாடிலைட் மெசேஜிங் வசதி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன்..!

Tharshi

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு..!

Tharshi

Leave a Comment