குறும்செய்திகள்

ஜூன் 21 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா.. : கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து..!

June 21 Whether travel restrictions will be relaxed

“எதிர்வரும் 21 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கக்கூடும்” என, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும், நடமாட்டக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இதன்போது, மேலும் கருத்துவெளியிட்ட அவர்..,

பயணக் கட்டுப்பாடு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக பல தரப்பினருடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் ஜூன் 21 ஆம் திகதியை அண்மிக்கும்போது, இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

இதற்கு முன்னதாக கடந்த 14 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தினார்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என கொவிட் தொற்று பரவல் தொடர்பில் அவதானிக்கப்பட்டதையடுத்து பின்னர், அமுலில் இருந்த கட்டுப்பாட்டை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

June 21 Whether travel restrictions will be relaxed

Related posts

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்..!

Tharshi

After A Tumultuous Run In The White House, Sean Spicer is Ready To Talk Now

Tharshi

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படியென்று தெரியுமா..!

Tharshi

Leave a Comment