மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் நேற்று பேசிய சசிகலா, `நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது` என கூறியுள்ளார்.
சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட 16 பேர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது :
“கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.
1987-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம்.
எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம்.
நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது.”
என அவர் தெரிவித்துள்ளார்.
Sasikala says No one can stop my party work