குறும்செய்திகள்

18-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

18th June Today Raasi Palankal

இன்று ஜூன் 18.2021

பிலவ வருடம், ஆனி 4, வெள்ளிக்கிழமை, 18.6.2021
வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 4:45 வரை,
அதன்பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் மாலை 6:13 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : பைரவர் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனைகள் படைக்கும் நாள்.
பரணி: மனதில் இருந்த எதிர்பார்ப்புக்கேற்ற நன்மைகள் இருக்கும்.
கார்த்திகை 1: தனவரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் பகை மாறும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பல காலமாகச் சந்திக்காத நண்பர்களைத் தொடர்பு கொள்வீர்கள்.
ரோகிணி: நல்லபெயர் எடுப்பதற்கு நீங்கள் செய்யும் முயற்சி வெற்றிபெறும்.
மிருகசீரிடம் 1,2: அதிகம் உழைப்பீர்கள். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நீங்கள் கைமாற்றுக் கொடுத்திருந்த தொகை சிறிது மீளும்.
திருவாதிரை: மற்றவர்களை குறை கூறாமல் உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உடன் பணிபுரிபவர்கள் உங்களால் நன்மை அடைவார்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: அதிருப்திகள் மாறும். புதிய விஷயங்களில் ரிஸ்க் வேண்டாம்.
பூசம்: நேசித்த நண்பர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
ஆயில்யம்: வேலைச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற பாராட்டு வரும்.

சிம்மம் :

மகம்: மன தைரியம் அதிகரிக்கும். பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.
பூரம்: நற்செய்தி வரும். தந்தை உடல்நலக் கோளாறுகள் நீங்கி நலம் பெறுவார்
உத்திரம் 1: குடும்ப பிரச்னைகள் தீரும். நண்பர்களின் செயல்கள் நிம்மதி வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குழந்தைகளின் செயல்களால் பெற்றோருக்கு மகிழ்ச்சி வரும்.
அஸ்தம்: தொழில் செய்பவர்கள், அதிக லாபத்தைப் பெற வாய்ப்பு வரும்.
சித்திரை 1,2: வேகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பயங்கள் விலகும்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிரிந்து சென்ற உறவினர் இணைவர்.
சுவாதி: மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு கூடுதலாகும்.
விசாகம் 1,2,3: உழைப்புக்கு பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையும் உயரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: மனச்சோர்வு தீர்ந்து, பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம்: எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: தடைகளை தாண்டி, வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

தனுசு:

மூலம்: பணப்பற்றாக்குறை பற்றிய பயம் தீரும். திருப்பம் வரும்.
பூராடம்: குடும்பத்தில் சகோதரர் ஒற்றுமை கூடும். திருமணம் கைகூடும்.
உத்திராடம் 1: எதிர்பாலின நண்பரால் நன்மை ஒன்று வரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: புதிய முயற்சிகள் பலிதமாகும். தாமதங்களைத் தவிர்க்க முடியாது.
திருவோணம்: நன்மை உண்டாகும். பேச்சுத் திறமை அதிகரிப்பதால் வெற்றி வரும்.
அவிட்டம் 1,2: அலுவலக சாதனைக்குப் பல யுக்திகளைப் புதிதாகக் கற்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குழந்தைகள் வாழ்வில் நல்ல திருப்பம் வரும்.
சதயம்: மனக்குறை வந்து அகலும். புரளி பேசாதிருந்தால் பிரச்னை வராது.
பூரட்டாதி 1,2,3: யாருடைய குறையையும் குறிப்பிட்டுப் புண்படுத்த வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: செய்யும் எந்தச் செயலுக்கும் பாராட்டு எதிர்பார்க்க வேண்டாம்.
உத்திரட்டாதி: மற்றவர் பணிகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும்
ரேவதி: செலவு ஒன்று நன்மை தரும். பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.

18th June Today Raasi Palankal

Related posts

முதன் முதலில் வெப் தொடர் மூலம் இணைந்த ராணா – வெங்கடேஷ்..!

Tharshi

ஆன்லைன் ஆபத்துக்கள் : அச்சத்தில் சிறுமிகள்..!

Tharshi

டிக் டாக் செயலி தடை விவகாரம் : டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!

Tharshi

Leave a Comment