குறும்செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் : சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

Court order for 64 people including Zahrans sister

21.4.2019 அன்று, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழுத்து மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் களுவாஞ்சிக்குடி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானுமான கருப்பையா ஜீவராணி இன்று (17) உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் மற்றும் சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ் வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையி,ல் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 69 பேரின் வழக்குகள் இன்று (17) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

ஏனைய 64 பேரும் நாட்டின் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அவர்களை அழைத்து வரமுடியாததாலும் அவர்களை எதிர்வரும் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எழுத்து மூலம் உத்தரவிட்டார்.

Court order for 64 people including Zahrans sister

Related posts

பிக்பாஸ் வீட்டில் போட்ட குத்தாட்டம் : கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிய ஜி.பி.முத்து..!

Tharshi

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Tharshi

ஏமனில் 367 அடி மர்ம கிணறு : வீசும் துர்நாற்றம் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!

Tharshi

Leave a Comment