குறும்செய்திகள்

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Curry leaves Rasam Soup Recipe in Tamil

கறிவேப்பிலையை தினமும் உடலில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அந்தவகையில் கறிவேப்பிலையை வைத்து இந்த ரசத்தை சூப் போன்று எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போமா..?

தேவையான பொருட்கள் :

மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கையளவு
பூண்டு – 6 பல்
தக்காளி – 1
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

  • மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.
  • இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.. 🙂

Curry leaves Rasam Soup Recipe in Tamil

Related posts

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!

Tharshi

20-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு..!

Tharshi

Leave a Comment