குறும்செய்திகள்

குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத உணவுகள் எவையென தெரியுமா..?

Foods that should not be given to children

உடல்நலத்தைக் காக்கவும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து எடுப்பதில் கொஞ்சம் அவர்களுக்காக நேரத்தை செலவழிப்பது என்பது மிகவும் அவசியம். அந்தவகையில், குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது.

குழந்தைகள் விருப்பப்பட்டு கேட்டால் உடனே வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லதா, கெட்டதா என சற்றும் சிந்திக்காமல் செய்கிறோம். கடைகளில் அழைத்து சென்று பாருங்கள். பில் போடும் இடத்தில் சாக்லெட், லாலிபாப், இன்னும் பல குழந்தைகளுக்கான உணவுகளை வைத்து அடுக்கி இருப்பார்கள். இதெல்லாம் பிஸினஸ் டெக்னிக்.

அந்த வகையில், குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது.

அதைப் பற்றி இங்குப் பார்க்கலாமா..?

சிவிங் கம் : நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.
தவறுதலாக குழந்தைகள் விழுங்கிவிட்டால் பின்னர் பிரச்னைதான்.

இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும். மலம் மூலமாக வெளியே வரவில்லை என்றால் மருத்துவரின் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். எனவே சிவிங் கம்களைக் குழந்தைகளுக்கு தரவே கூடாது.

சாக்லெட் : சாக்லெட்கள் இன்றைய குழந்தைகளின் விருப்பமான உணவு. அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாக்லெட்டை தவிருங்கள்.குழந்தை மிகவும் அடம்பிடித்தால் கொகோ கலந்த தரமான டார்க் சாக்லெட்டை வாங்கித் தரலாம். ஆனால் இந்த டார்க் சாக்லெட்டையும் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

பிஸ்கெட் : கடையில் அடுக்கி வைக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் இந்த பிஸ்கெட்கள். எண்ணற்ற பிராண்டுகள் உள்ளன. இதைக் குழந்தைகளுக்கு தராமல் வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனினும் நீங்கள் தராமல் இருப்பதே நல்லது. அனைத்து பிஸ்கெட்டும் மைதாவால்தான் செய்யப்படுகிறது.

பிஸ்கெட்டுகான அடிப்படை பொருளே மைதாதான். குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.கடையில் விற்கும் க்ரீம் பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்பு உள்ளன. இவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.

கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள் : கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது. வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள். கடைகளில் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம்.

குளிர்பானங்கள் : இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள். மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும்.

உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும். ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.

ஐஸ்கிரீம் : 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம். இதை ஹோம்மேட் ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுங்கள்.

நூடுல்ஸ் : முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன.

இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும். இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.

பாக்கெட் உணவுகள் : 

ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும். இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும்.

பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம். கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.

சிப்ஸ் வகைகள் : ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன. இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும்.

இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

Foods that should not be given to children

Related posts

யாழ் – சென்னை விமான சேவை : பயணிகளின் அதீத ஆர்வம்..!

Tharshi

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது : மஹிந்த அமரவீர..!

Tharshi

விரைவில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..!

Tharshi

Leave a Comment