குறும்செய்திகள்

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!

One of the worlds largest diamond found

உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.

இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1 ஆம் திகதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One of the worlds largest diamond found

Related posts

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி : வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்..!

Tharshi

இந்தியாவில் முதல் பச்சை பூஞ்சை நோய் பாதித்த நபர் : மும்பை மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..!

Tharshi

Leave a Comment