குறும்செய்திகள்

தனி விமானத்தில் அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்..!

Rajinikanth will travel to the US for a physical examination

எதிர்வரும் 19 ஆம் திகதி உடல் பரிசோதனைக்காக, நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது “அண்ணாத்த” திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. “அண்ணாத்த” படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால், தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார்.

தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் திகதி (சனிக்கிழமை) அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினர் ஒரு சிலரும் பயணிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth will travel to the US for a physical examination

Related posts

காலை உணவில் அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

Tharshi

பாகிஸ்தானுடன் உறவை முறித்து எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா..!

Tharshi

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment