குறும்செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் அப்டேட்..!

Samsung Galaxy F22 Latest Update

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ22 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதவிர புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது ஸ்மார்ட்போன் SM-E225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த தளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் S AMOLED +90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2 எம்பி என குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

Samsung Galaxy F22 Latest Update

Related posts

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது..!

Tharshi

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இத்தனை வில்லன்களா.. : லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

11-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment