குறும்செய்திகள்

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் : ஆய்வில் தகவல்..!

The common cold and flu can protect us

சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன் என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது :-

“யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை எதிர்த்து அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன.

அப்போது உருவாகும் எதிர்ப்பாற்றல், கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இவை அந்த வைரஸ்களின் வேகத்தையும் நீடிக்கும் காலத்தையும் பொறுத்தது.”

இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The common cold and flu can protect us

Related posts

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

67 ஓட்டங்களால் வென்றது இந்தியா..!

Tharshi

மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை : விரைவில் அறிமுகம்..!

Tharshi

Leave a Comment