பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய வடிவேலுவின் பட பிரச்சினையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23 ம் புலிகேசி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட வேலையை ஆரம்பித்தார்கள்.
சிம்புதேவன் இயக்க அந்த படத்தை சங்கர் தயாரித்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு அந்த படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஈடுபட்டுள்ளாராம். இதனால், விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனை தீர்ந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.