குறும்செய்திகள்

அமெரிக்காவில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை நிறுத்தம்..!

Galaxy Z Fold2 sales stopped in the US

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், புதிய இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தற்போது கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டும் கேலக்ஸி போல்டு 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி இசட் போல்டு விற்பனை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் கேலக்ஸி இசட் போல்டு 2 பல்வேறு நெட்வொர்க் வேரியண்ட்களும் விற்று தீர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சில வலைதளங்களில் மட்டும் கேலக்ஸி இசட் போல்டு 2 கிடைக்கிறது. இந்த தளங்களிலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம்.

முந்தைய தகவல்களில் சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெறும் என கூறப்பட்டது.

Galaxy Z Fold2 sales stopped in the US

Related posts

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகளும்.. பாதிப்புக்களும்..!

Tharshi

கோடையில் உணவை குறைத்து இதை அதிகம் குடித்து பாருங்க..!

Tharshi

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

Leave a Comment